Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மே 03 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஷவர்மா“ எனப்படும் உணவை உட்கொண்ட மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் பஸ் நிலைய பகுதியில் ஷவர்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகத்தில் கடந்த 1 ஆம் திகதி விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் ஷவர்மா வாங்கி சென்றனர்.
இதில் கரிவல்லூரை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகள் தேவநந்தா (வயது 16) என்ற சிறுமியும் ஷவர்மா வாங்கிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த ஷவர்மாவை உட்கொண்ட சில மணி நேரத்தில் தேவநந்தாவுக்கு வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனே அவரை பெற்றோர் அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் , தேவநந்தா உட்கொண்ட உணவு காரணமாகவே அவருக்கு வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டிருப்பதாக கூறினர்.
இதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
தேவநந்தா பலியான சிறிது நேரத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலரும் வைத்தியசாலைக்கு வந்தனர். அவர்களும் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வரை 31 பேருக்கு இப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருமே தேவநந்தா,ஷவர்மா உட்கொண்ட அதே உணவகத்தில் உணவு உண்டவர்கள் ஆவர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த உணவகத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். மேலும் அங்கிருந்த உணவினை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உணவகத்திற்கு சீல் வைத்தனர்.
இதற்கிடையே பொலிஸாரும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தேவநந்தா இறந்த விவகாரம் தொடர்பாக உணவகத்தின் மேலாளர், ஊழியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
7 minute ago
27 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
27 minute ago
31 minute ago
1 hours ago