2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாமனாரின் பாலியல் சேஷ்டை!

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்கோட்டை

உணவில் விஷம் வைத்து மாமனாரைக் கொன்றதாக மருமகளை கைது செய்த பொலிஸார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தன் மாமனார்-மாமியாரை ஒரு ஆண் கூட எளிதில் சமாளித்து நல்ல பெயரை வாங்கி விடக்கூடும். ஆனால், பெண்ணுக்கு அவ்வளவு சுலபம் இல்லை.

அதுவும் புதிய சூழலை சந்தித்தாலும் எத்தனையோ பிரச்சினைகளையும் அங்கே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதில் வெற்றி பெறுவதுதான் இறுதியில் மேல் கடினமாகிவிடுகிறது. வரதட்சணை பிரச்சினை என்றாலே மாமியார் தான் காரணமென்றாகி விடுகிறது.

 பாலியல் தொல்லை என்றால் அந்த வீட்டு மாமனார் தான் காரணமாகிறார் என்று சொல்லும் அளவுக்கு ஆங்காங்கே மலிவான செயல்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. அப்படித்தான், இப்போதும் ஒரு சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்துள்ளது.

 இங்கு கேளல் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வரும் தம்பதி வினோபாராதுஜன் - கனிமொழி. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருஷங்கள். ஆனால், குழந்தை இல்லை.. கல்யாணம் ஆகி 4 வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கிறதே என்று தம்பதி இருவருமே விரக்தியில் இருந்திருக்கிறார்கள்.

இதனிடையே, கனிமொழிக்கு அவரது மாமனார் முருகேசன் அவ்வப்போது பாலியல் தொல்லை தந்து வருவதாக தெரிகிறது. அதுவும் வீட்டில் யாருமில்லாத நேரத்தில்தான் அளவுக்கு அதிகமாக தொல்லை தர முயன்றதாக கூறப்படுகிறது. ஆரம்பத்திலேயே இதனால் அதிர்ச்சி அடைந்த கனிமொழி, நடந்தது குறித்து கணவர் வினோபாராஜனிடம் சொல்லி உள்ளார். ஆனால், அவர் அதனை நம்பவில்லை. பலமுறை இதுகுறித்து சொல்லியும், "என் அப்பா அப்படியெல்லாம் கிடையாது. அபாண்டமா பொய் சொல்லாதே" என்று வினோபா சொன்னதாக தெரிகிறது.

இதனால் மேலும் வெறுப்பின் உச்சத்துக்கு போனார் கனிமொழி. ஒருபக்கம் கணவனின் புறக்கணிப்பு மறுபக்கம் அத்துமீறி கொண்டிருக்கும் மாமனார் என இருதலைக்கொள்ளியாக துடித்து, வேறு வழியில்லாமல்தான் இந்த அபாய முடிவுக்கு வந்தார்.  ஒருநாள் இரவு சாப்பாட்டில் விஷம் வைத்துவிட்டார். அதாவது குழம்பில் எலிபேஸ்ட்டையும், குருணை மருந்து ரெண்டையுமே கலந்து மாமனாருக்கு தந்து சாப்பாடு போட்டுள்ளார். அதனை சாப்பிட்ட முருகேசனுக்கு திடீரென வயிற்றுவலி வந்து அவதிப்பட்டுள்ளார்.

பதறிப்போன குடும்பத்தினரும் அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மறுநாளே இறந்துவிட்டார். அப்போது வரை இந்த விஷயத்தை பற்றி கனிமொழி யாரிடமும் சொல்லவில்லை. குடும்பத்தாரிடம் மறைத்தே வந்துள்ளார்.

ஆனால், உண்மையை மறைத்ததால் கனிமொழிக்கு உறுத்தல் அதிகமாகி விட்டது. இந்த உறுத்தல் மன அழுத்தத்தில் கொண்டு போய் விட்டுவிட்டது. இதற்கு மேலும் விஷயத்தை மறைக்க விரும்பாமல், கனிமொழி, நேரடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக கொடுத்துவிட்டார்.

அதன் அடிப்படையில், சாப்பாட்டில் விஷம் வைத்து மாமனாரை கொன்ற மருமகள் கனிமொழியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .