2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன் தற்கொலை முயற்சி

Freelancer   / 2024 செப்டெம்பர் 09 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பூரில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன் தானும் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம்  காங்கேயம் அடுத்துள்ளது எல்லப்பாளையம் கிராமப் பகுதியில் விவசாயம் செய்து வருபவர் பழனிசாமி. இவருடைய மகள் அம்பிகாவை ராஜேஷ் குமார் என்பவருக்கு பழனிசாமி திருமணம் செய்து வைத்திருந்தார்.

ராஜேஷ்குமார் குடும்ப தகராறு காரணமாக மாமனார் பழனிசாமியை ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுக்கொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், உடனடியாக மீட்கப்பட்ட அவர் காங்கேய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருமகனே மாமனாரை சுட்டுக் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X