2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

மாமாவைத் திருமணம் செய்து வைத்ததால் உயிரிழந்த சிறுமி

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாமாவைத் திருமணம் செய்து வைத்ததால் 15 வயதான சிறுமியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், வரதய்ய பாளையத்தை சேர்ந்த குறித்த சிறுமி அப்பகுதியிலுள்ள பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமிக்கு அவரது மாமாவை ( தாயின் சகோதரர்) திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்  தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.



எனினும் இத் திருமணத்தில் சிறுமிக்கு விருப்பம் இல்லை எனவும் தான் படிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்து வந்துள்ளதோடு இது குறித்து அவரது பாடசாலை, பொலிஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் புகார் அளித்துள்ளதாகவும் எனினும் அதனை யாரும் கண்டுகொள்ள வில்லை எனவும்  கூறப்படுகின்றது.

 இந் நிலையில் சிறுமையின் எதிர்ப்பை மீறி அவரது பெற்றோர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி தாய் மாமனுடன் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் இதனால் விரக்தியடைந்த சிறுமி நேற்று முன்தினம்(27) வீட்டின் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X