Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஏப்ரல் 21 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் , கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வந்தன.
முகூர்த்தம் வந்ததும் மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளையும் மாலையை எடுத்து மணமகளுக்கு அணிவிக்க போனார். அப்போது, தடுத்து நிறுத்திய மணப்பெண், மணமேடையில் இருந்து கீழே இறங்கி ஓடிவிட்டார்.
மணமகள் அறைக்குள் ஓடிச்சென்ற மணப்பெண், கதவை உள்ளே பூட்டிக்கொண்டார். என்ன செய்வதென்று தெரியாத பொலிஸார், இதுதொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்துவந்து பெண்ணை மீட்ட பொலிஸார், விசாரித்ததில், காதல் விவகாரம் அம்பலமானது. எனினும், பெற்றோரின் கட்டாயத்தில் திருமணத்துக்கு சம்மதித்தாக கூறியுள்ளார்.
மணமகன் வீட்டாருக்கு நஷ்டஈடு கொடுக்க ஒப்புக் கொண்டதையடுத்து, அனைவரும் சென்றுவிட்டனர். மணமேடை வரை அழைத்து வந்து இப்படியெல்லாம் அசிங்கப்படுத்த கூடாது என்று பொலிஸார் மணப்பெண்ணுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago