2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

மாலையால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 30 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணத்தின்போது மணமகன் செய்த காரியத்தால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

வட இந்தியாவில் மருதாணி வைத்தல், மாலை மாற்றுதல் போன்ற திருமண சடங்குகள் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் உத்தர பிரதேச மாநிலத்தின் ஆரையா மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில்

மணமகன் மற்றும் மணமகளுக்கு தாலி கட்டுவதற்கு முன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

இதன்போது மணமகன் மாலையை தூக்கி எறிந்ததாக மகமகள் கோபித்துக்கொண்டு திருமணத்தை நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணமகன் நான் மாலையை எறியவில்லை என்று தெரிவித்தாலும் அதை மணமகள் ஏற்கவில்லை. இதனால் இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டவே அவர்கள் இறுதியாக பொலிஸ் நிலையத்தை  நாடியுள்ளனர்.

அங்கு பொலிஸார் பெண் வீட்டாரிடம்  சமாதானம் பேச, மணமகள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் அதன்பின் திருமணம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .