2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மிகுந்த வேதனை அடைந்தார் அனன்யா !

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மும்பை ;

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக  கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி அவரை மும்பையில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். அவரது பிணை  மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

ஆர்யன்கானுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்று அவரது அலைபேசி  மூலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆர்யன்கானுக்கும், நடிகை அனன்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நடிகை அனன்யா பாண்டேவை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் 2 தடவை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்கள். போதைப்பொருள் விவகாரத்துக்கும், தனக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்று நடிகை அனன்யா மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை அனன்யாவுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 3ஆவது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர். திங்கட்கிழமை (இன்று) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் இன்று நடிகை அனன்யாவிடம் மீண்டும் விசாரணை நடக்கிறது. முதன் முறை 2 மணி நேரமும், 2ஆவது தடவை 4 மணி நேரமும் நடிகை அனன்யாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படடு இருப்பதால் நடிகை அனன்யா மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .