2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 17 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்னல் தாக்கியதில்  8 பேர் உயிரிழந்த சம்பவம் அசாமில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடும் மழை பெய்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக திப்ரூகர், பர்பேட்டா, கோல்பாரா உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 2 சிறார்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசாமில் கனமழையால் ஏற்பட்ட புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .