2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

’மிஸ்டர் 56' ;என மோடியை கிண்டலடித்த ராகுல்..!

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் சீனா தனது எல்லைக் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளாதது ஏன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் பிரதமர் மோடி டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்; 'மிஸ்டர் 56 இன்ச்' என ஆரம்பித்து, 13ஆவது சுற்று இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தைக்கு பின்னும் எல்லை விவகாரத்துக்கு முடிவு கொண்டுவரப்படாதது ஏன்?.

மோடி தனது செயற்கையான அரசியல் பிம்பத்துக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். இவ்வாறு காங்கிரஸ் எம்பி ராகுல் கூறினார். மேலும்,எல்லைப் பிரச்சினைக்கு சரியான தீர்வு கொண்டு வரவில்லை என்பதை குறிக்கும் வகையிலும் '56 இன்ச்' என்று பிரதமரை தனது பதிவில் கிண்டலடித்துள்ளார் ராகுல். ஹிந்தியில் இடப்பட்ட இந்த டுவீட்டுக்குபாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக லடாக் பகுதியில் சீனப் படைகளின் அத்துமீறல் அதிகமாக உள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசத்தின் வான் எல்லையில் சீன விமானங்கள் அவ்வப்போது எல்லைமீறி வருகின்றன. இந்த பிரச்சினை இரு நாட்டு இராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னரும் தீர்வுக்கு வரவில்லை. இதனையடுத்து ராகுல் விமர்சனத்தை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .