A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பூர்:
அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய நான், மக்களின் ஆதரவோடு மீண்டும் முதல்வராக வந்து அந்த திட்டத்தை துவக்கி வைப்பேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பைபாஸ் ரோட்டில், தேர்தல் பிரசாரம் செய்து முதல்வர் பேசியதாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நான் தான் அடிக்கல் நாட்டினேன். தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு, மீண்டும் முதல்வராக வந்து, அந்த திட்டத்தை துவக்கி வைப்பேன். விவசாயிகளின் இன்னல்களை போக்கவே விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு நீர்வளம் பெருக்கப்பட்டுள்ளது. ஏழை தொழிலாளர்கள், கொங்கிரீட் வீடு வழங்கப்படுகிறது. இனிமேல் வீடு இல்லாத தொழிலாளர்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
27 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
8 hours ago
9 hours ago