2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 08 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவபூமி துவாரகா:

குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 7 மீனவர்கள் குஜராத் கடற்பகுதிக்கு உட்பட்ட அரபுக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

சர்வதேச கடல் எல்லை அருகில் அவர்கள் சென்றபோது, அவர்கள் மீது நேற்று மாலை பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மகாராஷ்டிர மீனவர் ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே (வயது 32) உயிரிழந்தார். மற்றுமொரு  மீனவர் படுகாயமடைந்தார்.

நேற்று மாலை இந்த தாக்குதல் நடந்துள்ளது. உயிரிழந்த மீனவரின் உடல் குகா துறைமுகத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டது. போர்பந்தர் நபி பந்தர் பொலிஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .