Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆடிக் கிருத்திகை நாளில் மனைவி மீன் குழம்பு வைத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து மனைவி தாக்கப்பட்டும், கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று தமிழகத்திலுள்ள கொரட்டூர் எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
தமது பெற்றோருக்கு இடையில் இவ்விடயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மகன்கள் இருவரும் தாயின் உடைய சகோதரியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் மீண்டும் இரவு 10 மணி அளவில் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது தமது தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததையும், தாய் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் மற்றும் அயலவர் உடனடியாகப்பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரின் பிரேதத்தை பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்ததோடு படுகாயத்துடன் கிடந்த மனைவியை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான விசாரணையில் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் மீன் குழம்பு வைத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரம் அடைந்த குமார் மனைவி துர்காவை அருகில் கிடந்த கம்பியால் தலையில் ஓங்கி அடித்ததாகவும், அதில் மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை, இறந்துவிட்டதாக நினைத்து பயந்து போன குமார், தனது வேஷ்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து கொரட்டூர் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
9 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago