A.K.M. Ramzy / 2021 மார்ச் 01 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 68 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி இன்று காலை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வசித்த கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த ஸ்டாலின், தாயாரிடம் ஆசி பெற்றார். பின்னர், தந்தையின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், பின்னர் அண்ணா நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
அதே வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின், அங்கிருந்து கிளம்பி வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago