2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

முகக் கவசத்தால் அதிகரித்த அபராதம்; 4 லட்சம் ரூபாவைக் கடந்தது

Ilango Bharathy   / 2022 ஜனவரி 06 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரோன் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் சென்னையில் நேற்று முன்தினம்(5)  மாத்திரம் முகக்கவசம் அணியாத 2,286 பேரிடம் இருந்து இந்திய மதிப்பில்  4.83 லட்சம் ரூபா  அபராதமாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த டிசெம்பர் மாதம்  31ஆம் திகதி தி முதல் தற்போது வரை 12.54 லட்சம் ரூபா அபராதமாகப் பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .