2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

முகேஷ் அம்பானியால் மகிழ்ச்சியில் இந்தியர்கள்

Ilango Bharathy   / 2022 மார்ச் 17 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம் மற்றும் எம்3எம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இணைந்து அண்மையில் வெளியிட்டன.

இப்பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகர்  எலான் மஸ்க் முதலிடத்தையும், அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்தையும்  பிடித்துள்ளனர்.



இந்நிலையில் இப் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி இந்திய மதிப்பில் சுமார் 7.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 9ஆம் இடத்தை பிடித்துள்ளார். 

இப் பட்டியலில் சீரம் மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனாவாலா, டிமார்ட் நிறுவனர் தமானி, லட்சுமி மிட்டல் ஆகியோர் உலக பணக்காரர்கள் 100 பேரில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாயுடன் அதானி 2ஆம் இடத்தையும், 2 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார் மூன்றாம் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியானது இந்தியர்களிடையே பெரும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .