2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

முதலமைச்சருக்குக் கொலை மிரட்டல்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுக்குச்  சமூக வலைத்தளத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்காடு மாவட்டம் எலப்புள்ளி கிராம பகுதியை சேர்ந்தவரும் பா.ஜனதா கட்சியின் தொண்டருமான ஜெயப்பிரகாஷ் என்பவரே இவ்வாறு  கடந்த 2 தினங்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆபாசமாகவும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள், ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி பாலக்காடு பொலிஸார் ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இதை அறிந்த ஜெயபிரகாஷ் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X