2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

முதலமைச்சரைச் சீண்டிய நித்தியானந்தா

Ilango Bharathy   / 2021 நவம்பர் 18 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியார்நித்தியானந்தா வெள்ள பாதிப்பு  குறித்து தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில்  வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில் “எத்தனை முதலமைச்சர்கள்  வந்துபோனாலும், சென்னை வெள்ளம் பிரச்சினை முடியவில்லை. நீரின் வீட்டில் நாம் வீடு கட்டியதால், இப்போது நம் வீட்டில் நீர் வீடு கட்டியுள்ளது” என்று தனக்கேயுரிய பாணியில் கூறியுள்ளார்.

மேலும், “மழை வெள்ளத்தை உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்ட உடனே, நம்முடைய கவனம் திசை மாறிவிடுகிறது. இதுவும் ஒரு பிரச்சினை. இத்தனை ஆண்டு காலமாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை அல்லது பிரச்சினை முற்றி போய்விட்டது என்பது தெரிகிறது. எங்கோ இயற்கையோடு நமக்கு இருக்கும் தொடர்பை இழந்துவிட்டோம்" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .