A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுவை ;
புதுவையில் பெரும்பான்மையை இழந்த நிலையில் நாராயணசாமியின் இராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆட்சி குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்த அமைச்சர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை இராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆகவும், என்.ஆர்.காங்கிரஸ் -7, அ.தி.மு.க. -4, நியமனம் (பா.ஜ.க.) 3 என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆகவும் சம நிலையில் இருந்தது. இதையடுத்து சட்ட சபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நேற்று சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர். அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற நாராயணசாமி தனது பதவியை இராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.அதை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் முதலமைச்சர் நாராயணசாமியின் இராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார்.
1 hours ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
09 May 2026