Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 24 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக அளவில் 2021ம் ஆண்டின் காற்று மாசு குறித்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த IQAir என்ற நிறுவனம் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் படி உலகின் அதிக மாசடைந்த நகரமாக ராஜஸ்தானின் பிவாடி தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு நான்காவது மாசடைந்த நகரத்தின் பட்டியலில் டெல்லி இடம்பெற்றுள்ளது.
அதேவேளையில் அதிக மாசடைந்த தலைநகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. மேலும் அதிகளவில் மாசடைந்த முதல் 15 நகரங்களில் இந்தியாவில் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள முதல் 100 நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளமை இந்தியர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வாகனப் புகை, அனல் மின் நிலையங்கள், தொழில்துறை கழிவுகள் மற்றும் கட்டுமானங்கள் காரணமாகவே இக் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago