A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி - சசிகலா சந்திப்பு எந்த ஜென்மத்திலும் நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோட்டூர்புரத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மினி கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கல்வி, செல்வம், வீரத்துக்குப் பிறகு முக்கியத்துவம் பெற்றுள்ளது உடல் நலம். அதைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுகி ன்றது.
கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த பாமக, தேமுதிக, பாஜக, தமாகா கட்சிகளுடனான எங்களின் கூட்டணி இந்தத் தேர்தலிலும் தொடர்கிறது. சசிகலா, டிடிவி தினகரனுக்குப் பொது எதிரி அதிமுக. அவர்கள் இருவரும் ஒன்றிணைவோம் வாருங்கள் என்று திமுகவைத்தான் அழைக்கின்றனர். வேறு யாரையும் கூப்பிடவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி - சசிகலா சந்திப்பு எந்த ஜென்மத்திலும் நடக்காது'' என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலாதா சசிகலாவைச் சந்திப்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''யார் யாரை வேண்டுமானாலும் நட்பு அடிப்படையில் சந்திக்கலாம்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026