A.K.M. Ramzy / 2021 ஜனவரி 10 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை வரும் 16ஆம் திகதி , மதுரையில் முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கிறார்.
கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள ‛கோவிஷீல்டு' ‛கோவாக்சின்' தடுப்பூசிகளை, சமீபத்தில், அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
'வரும், 16ஆம் திகதி முதல், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துவங்கும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக, மூன்று கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
19 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
8 hours ago
9 hours ago