2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

முதல்வர் வேட்பாளர் தெரிவில் உள்வீட்டுச் சர்ச்சை

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பாமக தலைவர் ஜி.கே.மணி, அது அவர்கள் கட்சியின் தனிப்பட்ட முடிவு. கூட்டணியின் முடிவல்ல. எங்கள் முடிவை ராமதாஸ் உரிய நேரத்தில் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.

முதல்வர் வேட்பாளர் யார் என அதிமுகவுக்குள் பெரும் சர்ச்சை உருவானது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களுக்குள் கூட்டங்களை நடத்தினர். மோதல் பெரிதாக வெளியில் தெரிந்ததை அடுத்து ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுக மூத்த அமைச்சர்கள் ஈடுபட்டனர்.

அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, இதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அறிவித்தார்.

ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்கவில்லை. அதுகுறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தொடர்ச்சியாகக் கூறிவந்த நிலையில், அதிமுக தலைவர்கள் அதை எதிர்த்தனர்.

கே.பி. முனுசாமி கடுமையாக இதை எதிர்த்துப் பேசினார். எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்காதவர்களை நிராகரிப்போம் என்று தெரிவித்தார். நேற்று கூடிய பாஜக கூட்டத்தில் அதன் தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி தமிழகத்தில் என்.டி.ஏவின் முதல்வர் வேட்பாளர் குறித்து,தேர்தல் முடிவுக்குப் பின் முடிவெடுப்போம் எனப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்று தேமுதிக ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக பெரிய கட்சியாக உள்ளது. அதன் தலைமையில்தான் 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் பாமக, தேமுதிக, பாஜக, தமாகா உள்ளிட்டவை போட்டியிட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .