A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை;
மும்பை காந்திவிலில் பந்தர் பகாடி ரோட்டில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றுமுன்தினம் மின்கசிவு காரணமாக அதிகாலை 4.15 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தின் போது கோவில் பூட்டப்பட்டு இருந்தது. கோவிலுக்குள் 3 வாலிபர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.
பூட்டப்பட்ட கோவிலில் இருந்து அவர்களால் வெளியே வர முடியாததால், 3 பேரும் தீயில் சிக்கிப் பலியாகினர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவர்களை, உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026