2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மூதாட்டியை தூக்கி நடனமாடிய அமைச்சர்

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானாவில் அமைச்சராக உள்ள 60 வயதான மல்லா ரெட்டி தனது தொகுதி மக்களின் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது நடனம் ஆடுவது பொது மக்களிடம் இயல்பாக பழகுவது உள்ளிட்ட காரணங்களால் அமைச்சர் மீது அந்த தொகுதி மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.

இந்நிலையில் மல்லா ரெட்டி தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் ஏராளமான மூதாட்டிகள் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது தனது அருகில் இருந்த மூதாட்டியை பார்த்த மல்லா ரெட்டி தனது மடியில் அமருமாறு கூறியுள்ளார்.

மூதாட்டி வெட்கப்பட்டு அவரது மடியில் உட்கார மறுத்ததையடுத்து மல்லா ரெட்டி மூதாட்டியை தூக்கி கொண்டு நடனம் ஆடியுள்ளார்.

அதனை அருகில் இருந்த பெண்கள் கைகளை தட்டியபடி ஆரவாரம் செய்தனர். அமைச்சர் மூதாட்டியை தூக்கிக்கொண்டு நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X