A.K.M. Ramzy / 2021 நவம்பர் 09 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கமலா நேரு அரசாங்க பொது மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு பிரிவில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 40 குழந்தைகள் சிக்கிக் கொண்டதாகவும் 3 குழந்தைகள் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீதமுள்ள குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலியான குழந்தைகளின் குடும்பத்துக்கு முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 4 இலட்சம் நிவாரணமாக வழங்கப்படும் மத்திய பிரதேச மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
7 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Mar 2026