Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 30 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் மால்புரா பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் விவாகரத்து கோரியதற்கான காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண்ணும், அவருடைய சகோதரியும் எட்டு மாதங்களுக்கு முன்பு சகோதரர்கள் இருவரை திருமணம் செய்து கொண்டனர். எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருந்தநிலையில், மருமகளின் அனுமதியின்றி அவருடைய மேக்-அப் சாதனங்களை மாமியார் பயன்படுத்தி வந்திருக்கிறார்.
இதனை அறிந்த அந்த பெண் ஆத்திரமடைந்து உள்ளார். ஏதேனும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல வேண்டுமென்றாலும், மருமகளிடம் மேக்-அப் பொருட்கள் இருக்காது. அவருடைய மாமியாரே அவற்றை பயன்படுத்தி வந்திருக்கிறார்.
இதுபற்றி மாமியாரிடம் மருமகள் வாக்குவாதம் செய்திருக்கிறார். ஆனாலும் இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை. நடந்த விடயங்களை தன்னுடைய மகனிடம் மாமியார் தெரிவித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து, வீட்டில் இருந்து அந்த பெண்ணும், அவருடைய சகோதரியும் விரட்டி விடப்பட்டு இருக்கின்றனர். இதனை தொடர்ந்து,மருமகள் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஆக்ராவில் உள்ள குடும்ப ஆலோசனை மையத்தில், நடந்த விடயங்களை மருமகள் கூறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிற்று கிழமை, மருமகள் மற்றும் மாமியார் இருவரையும் அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது
எனினும், இந்த விடயத்தில் விவாகரத்து வேண்டும் என்று மருமகள் பிடிவாதத்துடன் இருக்கிறார். அனுமதியின்றி மேக்-அப் பொருட்களை மாமியார் பயன்படுத்துகிறார் என்பது மட்டுமல்லாமல் கணவர், குடும்ப வன்முறையில் ஈடுபடுகிறார் என்றும் தாயார் கூறும் விடயங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார் என்றும் அதனால் தான் விவாகரத்து கோரியதாகவும் மருமகள் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago