2025 ஜூலை 16, புதன்கிழமை

மைத்தேயிக்கு தடை

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக் கலவரமாக மாறியது. இதில் 178 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பிரிவினைவாத மற்றும் வன்முறை செயல்பாடுகள் காரணமாக பல்வேறு மைத்தேயி தீவிரவாத அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்த அமைப்புகள், மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் கொலை செய்வதுடன் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மத்திய அரசு கருதுகிறது.

மக்கள் விடுதலைப் படை (பிஎல்ஏ) மற்றும் அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி (ஆர்பிஎப்), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யுஎன்எல்எப்) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மணிப்பூர் மக்கள்படை (எம்பிஏ), காங்லீபாக் மக்கள் புரட்சிகர கட்சி, அதன் ஆயுதப் பிரிவான சிவப்பு ராணுவம் என்கிற காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சட்ட விரோத அமைப்புகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X