2025 மே 10, சனிக்கிழமை

மோடியிடம் ரூ.5,060 கோடி கேட்டு ஸ்டாலின் கடிதம்

Mithuna   / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிக்ஜாம் புயல் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயலால் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழை பெய்தது.

இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து, ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்க வேண்டும்” என கடிதத்தில் கோரியுள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X