Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவைச் சேர்ந்த யுவதியொருவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் கிராபிக் டிசைனராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை தனது நண்பர்களுடன் கேளிக்கை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட குறித்த யுவதி வீடு திரும்புவதற்கு தொலைபேசி செயலி (Apps) மூலம் இயங்கும் 'மோட்டார் சைக்கிள் டாக்சி' சேவையொன்றில் முன்பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ தினத்தன்று அப்பெண்ணை அழைத்து செல்ல டாக்சி வந்துள்ளது. இதன்போது குறித்த டாக்சியின் சாரதியான சகாபுதீன் , யுவதியை ஏற்றிக் கொண்டு பயணிக்கையில், யுவதியி மதுபோதையில் மயக்கம் அடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், யுவதியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தனது நண்பரான அக்தருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
பின்னர், விடிந்ததும் மயக்கத்தில் இருந்து தெளிவடைந்த யுவதியிடம்” நீங்கள் மதுபோதையில் இருந்ததால் உங்களை வீட்டில் விடாமல் இரவு எங்களுடன் உறங்க வைத்து நாங்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டோம் ”எனத் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய யுவதி சகாபுதீனின் வீட்டில் இருந்து வெளியேறி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது அவருக்கு கடுமையான உடல்வலி, மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உடல்நல பரிசோதனை செய்துள்ளார். இதன்போது அவர் கூட்டுப்பாலியல் வன்புணர்பு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடையந்த யுவதி, இது குறித்துப் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தமையை அடுத்து குற்றவாளிகளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .