2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

யார் இந்த புதுமுகம் ?

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 14 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டிகார்

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தற்போதே  காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் களப் பணியை தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில், பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் நடிகர் சோனு சூட்டின் சகோதரி  மல்விகா சூட் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகாரில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சோனு சூட் இந்தத் தகவலை தெரிவித்தார்.

எனினும், எந்தக் கட்சி சார்பில் போட்டியிடுவார் என்ற தகவலை  சோனு சூட் தெரிவிக்கவில்லை.  சோனு சூட் தனது பேட்டியின் போது தொடர்ந்து கூறியதாவது; 'எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல. எனது சகோதரி சமூகத்துக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வார்' என்றார். எனினும், ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே சிறந்த கட்சிகள்தான் என்றும் சோனு சூட் பேட்டியின் போது குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .