2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

யூடியூப் பார்த்து பிரபல தனியார் வங்கி ATM இல் கொள்ளை

Ilango Bharathy   / 2022 மார்ச் 06 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லியில் யூடியூபைப்  பார்த்து பிரபல தனியார் வங்கி  ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க மூவர் முயற்சி செய்த சம்பவம் டெல்லியில் இடம்பெற்றுள்ளது.

டெல்லியின்  நங்லோய் என்ற இடத்தில் உள்ள  தனியார் வங்கியொன்றின்  ஏ.எடி.எம். மையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவதினத்தன்று  நள்ளிரவில் குறித்த ஏ.டி.எம் மையத்துக்குள் புகுந்த மூவர் எ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து எடுக்க முயன்றுள்ளனர்.

இதன்போது அத்தனியார் வங்கியின் தலைமையகத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்கவே உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள் இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்த மூவரையும் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த மூவரும் பீகாரை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களில் ஒருவன் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதும் தெரியவந்தது.

அத்துடன் அவர்கள் மூவரும் டெல்லியில் ஒரே அறையில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்ததாகவும், யூடியூப் வீடியோ மூலம் ஈர்க்கப்பட்டு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து பொலிஸார் அவர்கள்  மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .