A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதற்காக கட்சி தொடங்கும் வகையில் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றி இருந்தார்.
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்ததும் மக்கள் மன்ற நிர்வாகிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மன்றத்தில் இருந்து விலகி பல்வேறு கட்சிகளிலும் சேர்ந்து வருகிறார்கள். இதனால் ரஜினி மக்கள் மன்றம் எல்லா மாவட்டங்களிலும் காலியாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த சுமார் 300 பேர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். ராமநாதபுரம், தேனி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அந்த நிர்வாகிகள் நேற்று மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தனர்.
தி.மு.க.வில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளில் ராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர் செந்தில்வேல், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த சுப்புராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026