2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

’ரஜினிக்காக பிரார்த்திக்கவும்’

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 31 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

ரஜினி நடித்த, அண்ணாத்த படம், தீபாவளி அன்று வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி, பேரனின் சந்தோஷத்தை பகிர்ந்தார். இதுவேளை, திடீர் உடல்நல குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ரஜினி பூரண உடல் நலம் பெற, அவரது ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதற்கு முன் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போதும், அவரது ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நடிகரும், ரஜினியின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ் தன் பிறந்த நாளை கொண்டாடவில்லை. இதுகுறித்து அவர், 'இந்தாண்டு என் பிறந்த நாளுக்கு யாரையும் சந்திக்கப் போவதில்லை. ரஜினி பூரண குணமடைய ராகவேந்திரா சுவாமியிடம் வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .