2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ரயில் நிலைய மாடியில் இருந்து குதித்து இளம் பெண் மரணம்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 15 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலைய மாடியில் இருந்து குதித்து, யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்சர்தாம் மெட்ரோ ரயில் நிலையத்ததில் நேற்றைய தினம்(14)  இச்சம்வம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று  கூரையில் இருந்து குதிக்க முயன்ற அவ் யுவதியை, அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்ற  போதும் அம் முயற்சி பயனளிக்கவில்லை எனவும், யுவதி கீழே குதித்தபோது, பயணிகளும், பாதுகாப்புப்படை வீரர்களும் போர்வையை விரித்து அவரை கீழே விழாதவாறு பிடித்தனர் எனவும் கூறப்படுகின்றது.

எனினும்  குதித்தவேகத்தில் காலில் பலத்த காயங்களுக்குள்ளான யுவதி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .