2025 மே 10, சனிக்கிழமை

ராஜ்பவன் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

Mithuna   / 2023 டிசெம்பர் 12 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கட்கிழமை (11) நள்ளிரவில் ஒரு மர்ம நபர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், கர்நாடக ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அபாயம் விளைவிக்கக்கூடிய எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.

மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X