2025 ஜூலை 16, புதன்கிழமை

ராமர் கோயிலுக்காக தயாராகும் விமான நிலையம்

Mithuna   / 2023 டிசெம்பர் 03 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந்திகதி இடம்பெறவுள்ளது.

இந்தியா முழுவதும் கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், அயோத்தி விமான நிலையமும் தயார் நிலையில் உள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டம் டிசம்பர் 15ம் திகதிக்குள் தயாராகிவிடும் என்று அறிவித்துள்ளார்.

இந்த விமான நிலையம் மர்யதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும் என்றும் விமான நிலையத்தில் போயிங் 737, ஏர்பஸ் 319 மற்றும் ஏர்பஸ் 320 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X