2025 மே 10, சனிக்கிழமை

ராமர் கோவில் வடிவிலான நெக்லஸ்

Mithuna   / 2023 டிசெம்பர் 20 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைரம் வியாபாரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரம் முன்னிலை வகிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (17) உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தை தொடங்கி வைத்தார். ஜனவரி மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேசம் நடைபெற உள்ளது.

இந் நிலையில் சூரத்தில் உள்ள வைர வியாபாரிகள், சூரத்தில் உள்ள ராமர் கோவில் விடிவிலான வைர நெக்லஸை வடிவமைத்துள்ளனர்.

இந்த வைர நெக்லஸில் 5 ஆயிரம் அமெரிக்கா வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளதுடன் 2 கிலோ கிராம் எடை கொண்ட வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி வைர வியாபாரிகள், “40 கலைஞர்கள் கொண்ட குழு 35 நாட்களாக இந்த நெக்லஸை வடிவமைத்துள்ளனர். இது வணிக நோக்கத்திற்கானது அல்ல. நாங்கள் இதை ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்க இருக்கிறோம்” என தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X