2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ரூ.100 கோடி நட்டஈடு கோரி அண்ணாமலைக்கு நோட்டீஸ்

Freelancer   / 2022 மார்ச் 26 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் டுபாய் பயணம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதேபோல், நஷ்ட ஈடாக 100 கோடி ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டுபாய் எக்ஸ்போ 2022இல் கலந்து கொண்டு தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணமாக துபாய் சென்றுள்ளார். 

முதல்வரின் இந்தப் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமால் அவதூறு பரப்பியதாகவும், அதற்காக அவர் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் இன்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .