2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ரூ.43 இலட்சம் கோடி வெளிநாட்டுக்கடன்

Freelancer   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி வரையான நிலவரப்படி இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் 57 ஆயிரம் கோடி டொலராக உள்ளது (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43 லட்சம் கோடி) என்று மத்திய நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுக் கடன் கொரோனா நெருக்கடியின்போது 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20.6 சதவீதமாக இருந்த வெளிநாட்டுக் கடன் நடப்பாண்டு மார்ச் மாதம் 21.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் 85.6 சதவீதமாக இருந்த இந்த கடனுக்கான ஒதுக்கீடு விகிதம் 101.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .