A.K.M. Ramzy / 2021 மார்ச் 07 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
மன்மோகன் சிங் அமைச்சரவையில் ரெயில்வே அமைச்சராகப் பதவி வகித்த தினேஷ் திரிவேதி, பா.ஜ.க.வில் சேர்ந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் தினேஷ் திரிவேதி. இவர் 2011-12 காலகட்டத்தில் மத்தியில் மன்மோகன் சிங் அமைச்சரவையில் ரெயில்வே அமைச்சராகப் பதவி வகித்தார். பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வந்த இவர், கடந்த மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் அவர் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோர் முன்னிலையில் நேற்று பா.ஜ.க.வில் சேர்ந்தார்.
அதைத் தொடர்ந்து அவர் பா.ஜ.க.வுக்கு புகழாரம் சூட்டி கருத்து தெரிவித்தார். அப்போது அவர், “இந்த பொன்னான தருணத்துக்காக காத்திருந்தேன். சில கட்சிகளில் குடும்பம்தான் பெரிது, ஆனால் பா.ஜ.க.வில் மனிதர்கள்தான் பெரிது” என குறிப்பிட்டார்.
3 minute ago
14 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
24 minute ago
31 minute ago