2025 ஜூலை 31, வியாழக்கிழமை

லஞ்சம், ஊழல் குறித்து வட்ஸ் அப்பிலேயே புகார் அளிக்கலாம்

Ilango Bharathy   / 2022 மார்ச் 21 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23ஆம் நாள் பஞ்சாபில் ‘தியாகிகள் தினமாகக்‘ கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில்  அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டாலோ அல்லது ஊழல் புரிந்தாலோ அதனை  வீடியோவாகவோ அல்லது ஓடியோவாகவோ (குரல் பதிவு )  எடுத்து இலஞ்சப் புகார் வட்ஸ் ஆப் எண்ணுக்குப் புகார் அளிக்கலாம் எனவும் அது குறித்து விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வட்ஸ் அப் எண் தியாகிகள் நாளில் அறிவிக்கப்படும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .