2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

’லவ் ஜிகாத் சட்டத்தால் சிக்கல்’

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக உறவுக்கு லவ் ஜிகாத் சட்டத்தால் சிக்கல் உருவாகி யுள்ளது. இதனால், தம் முதல்வர் பதவியை பாஜகவிடம் ஒப்படைத்து விட்டு தேசிய அரசியலில் தீவிரம் காட்டத் தயாராகிறர் நிதிஷ் குமார்.

நாடு முழுவதிலும் நடைபெறும் காதல் திருமணங் களில் இந்து பெண்களை மணமுடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மீது ‘லவ் ஜிகாத்’ புகார் எழுந்து ள்ளது. இதனால், பாஜக ஆளும் மாநிலங் களில் லவ் ஜிகாத்தை தடுக்க மதமாற்றத்துக்கு எதிரான சட்டம் அமுலாகி வருகிறது.

 உத்தரப்பிரதேசத்தில் அமுலானதை அடுத்து, மத்திய பிரதேசமும் இச்சட்டத்தை அமுலாக்கு வதில் இறங்கியுள்ளது.  

 இந்து ஜோர்கண்டின் மன்சின் கூட்டத்தில்  பேசிய ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் மூத்த தொண்டரும் பிஹார்-ஜோர்கண்டின் பொறுப்பாளருமான டொக்டர் சுமன், ‘உபியில் மதமாற்றத்துக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டதால் பல இந்து பெண்கள் முஸ்லிமாக மாற்றப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

பிஹாரிலும் இதுபோன்ற செயல்களில் தடுக்க அந்த சட்டத்தை இங்கு கொண்டு வர வேண்டும்.’ எனவும் தெரிவித்தார்.  இச்சட்டம் உபியில் அமுலான போது, ஜேடியுவின் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் அது தேவையில்லை என விமர்சித்து கருத்து கூறியிருந்தார்.

இதனால், மதமாற்றச் சட்டம் விவகாரத்தில் பாஜக-ஜேடியு உறவில் விரிசல் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகி உள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .