Freelancer / 2023 நவம்பர் 22 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு 2008-ம் ஆண்டில் மும்பையில் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டவர் உட்பட 175 பேர் கொல்லப்பட்டனர். இதன் 15-வது ஆண்டு நினைவுதினம் வரவுள்ள நிலையில், புதுடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் செவ்வாய்க்கிழமை (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2008 நவம்பரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பால் நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதல் மற்றும் அதன் கொடூரமான நடவடிக்கைகள், அமைதியை நாடும் நாடுகள் மற்றும் சமூகங்களில் இன்னும் எதிரொலிக்கின்றன.
லஷ்கர் இ தொய்பா தடைசெய்யுங்கள் என்று இந்தியாவின் தரப்பில் கோரிக்கை வரவில்லையென்றாலும், அதை நாங்களாகவே தடை செய்துள்ளோம். தீவிரவாதத்தை வேரறுக்க உலக நாடுகளுடன் இணைந்து இஸ்ரேல் எப்போதும் போரிடும். என தெரிவித்துள்ளது.
41 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
14 Apr 2026