2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வட்ஸ் அப்பில் பிரசவம்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பிணி ஒருவருக்கு வட்ஸ் அப்பின் மூலம் பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் காஷ்மீரில் இடம்பெற்றுள்ளது.

காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் அண்மைக்காலமாகக்  கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும்  அவரது பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டதால் அவரை  கிரால்போரா வைத்திய சாலைக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனினும் அப்பகுதியில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக வீதிவழியாகவோ, ஹெலிகொப்டர் மூலமாகவோ அக் கர்ப்பிணியைக் குறித்த வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் செய்வதறியாது திகைத்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், இது குறித்து கிரால்போரா வைத்திய சாலை மகப்பேறு வைத்தியர் பர்வைசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் வட்ஸ்அப் 'வீடியோ கோல்' மூலம் ஆரம்ப சுகாதார நிலைய வைத்தியரான அர்சாத் சோபிக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதன்மூலம்  குறித்த கர்ப்பிணிக்கு சுகபிரசவத்தில் அழகான பெண் குழந்தையொன்று  பிறந்துள்ளது.

 தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .