2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

வட்ஸ் அப்பில் ‘ஸ்டேடஸ்‘ வைத்த யுவதி கொலை

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வட்ஸ் அப்பில்  ஸ்டேட்டஸ்  வைத்த விவகாரத்தில் யுவதியொருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையின் சிவாஜி நகரைச் சேர்ந்தவர் லீலாவதி. 48 வயதான இவருக்கு 20 வயது நிரம்பிய மகள் உள்ளார்.

 இந்நிலையில் லிலாவதியின் மகள் கடந்த 12 ஆம் திகதி  தனது வட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். இதைப் பார்த்த அவரது தோழி தன்மீது கொண்ட கோபத்தினாலேயே அவர் இவ்வாறு செய்துள்ளதாக எண்ணி இது குறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

 இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணிக் குடும்பத்தினர் லிலாவதி தேவியின் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாக்குவாதம் முற்றிய நிலையில் தோழியின் குடும்பத்தினர் லீலாவதி தேவி மற்றும் அவரின் குடும்பத்தினரை உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

 இத் தாக்குதலில்  படுகாயமடைந்த லீலாவதி நேற்று முன்தினம் (13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .