2025 மே 10, சனிக்கிழமை

வரதட்சனை கேட்டு மூக்கை கடித்த கணவர்

Mayu   / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநில மகேஷ்பூர் பகுதியில் 22வயது பெண் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கெதிராக  பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்ததில் பொலிஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,

உத்தரப்பிரதேசம் மாநில மகேஷ்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஆஜ்மி (22) இவர், தனது கணவர் குடும்பத்தில் உள்ள 6 பேர் மீது வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், கணவர் தனது மூக்கை கடித்ததாகவும் கூறியுள்ளார். அந்தப் புகாரின்படி, மாமனார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்தப் புகாரில், "எனக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில், 5 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த 15-ஆம் திகதி வரதட்சணை கொடுக்கவில்லை எனக்கூறி என்னை எனது மாமியார் அடித்தார். எனது கணவர் என் மூக்கைக் கடித்துக் காயப்படுத்தினார். வரதட்சணையைக் காரணம்காட்டி, பலமுறை வீட்டைவிட்டு துரத்தியுள்ளனர். எப்போதெல்லாம் அவர்கள் துன்புறுத்துகிறார்களோ, அப்போது எல்லாம் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி என்னைச் சமரசம் செய்துவைத்தனர்" என்று கூறியுள்ளார்.

சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த அவரது கணவர், “நான் கேட்ட வரதட்சணையைகூட தர முடியாத உனக்கு மூக்கு எதுக்கு" எனக் கேட்டு, அவரது மூக்கைக் கடித்துத் துப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனால் வலி தாங்க முடியாத அவர், முதலில் பொலிஸ் நிலையத்திற்குசென்று புகார் அளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X