Ilango Bharathy / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பாற்பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ‘ஆனந்த் பால் தொழிற்சங்கம் லிமிடெட்‘ (அமுல்) அடுத்த 4 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமுலின் நிர்வாக இயக்குனர் அமித் வியாஸ் கூறுகையில், ”கால்நடைகளின் விந்து, கரு மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கறவை மாடு மற்றும் எருமை இனங்களை மேம்படுத்தி வருகிறோம்.

இதனால், தொழில் துறையினர் அதிகளவில் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக தொழில்நுட்பத்துடன், பால் உற்பத்தியில் மரபியல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதால் எதிர்கால கால்நடைகள் அதிக மரபியல் கொண்டதாக இருக்கும். இது அதிக பால் உற்பத்திக்கு உதவும். அத்துடன் இது விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை நேரடியாக மேம்படுத்தவும் உதவும்.
விவசாயிகளுக்கு பால் உற்பத்திச் செலவைக் குறைப்பதே எங்களது அடிப்படைக் கருத்து.
அந்தவகையில் மரபணு ரீதியாக உயர்ந்த மற்றும் அதே செலவில் இரண்டு மடங்கு அதிக பால் உற்பத்தி செய்யக்கூடிய ,பால் பண்ணையை உருவாக்குவதன் மூலம் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதே எமது நிறுவனத்தின் இலக்காக உள்ளது ” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .