2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ. 25 கோடி இலஞ்சம்

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை வழக்கிலிருந்து விடுவிக்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் ரூ. 25 கோடி இலஞ்சம் கேட்டதாக சுயேச்சையான சாட்சி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை   செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த தகவல் பெரிய அதிர்ச்சி அலையை தோற்றுவித்துள்ளது.

இந்த வழக்கில் சுயேட்சையான சாட்சியமாக பிரபாகர் செயில் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் ஞாயிறன்று மும்பை நகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறிய தகவல் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 3ஆம் திகதி   கோவா சென்ற கப்பலில் ஆர்யன் கானுடன் சுயேட்சையான சாட்சிகள் கோசாவியும் பிரபாகர் செயிலும் கப்பலிலிருந்து நேரடியாக போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு போதைப் பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரியான டிசோசாவிடம், கோசாவி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது இந்த போதைப்பொருள் வழக்கில் இருந்து என்னை விடுவிக்க ரூ.25 கோடி தர வேண்டும் என்று போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு உயர் அதிகாரியால் கூறப்பட்டுள்ளது. பின்னர் பேரம் பேசியதில் அந்தத் தொகை ரூ.18 கோடி ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ. 18 கோடியில் 8 கோடி என்சிபி பிராந்திய இயக்குனர் சமீர் வான்கெட்டேவுக்கு தரப்பட வேண்டும் என டிசோசா கூறியதாக பிரபாகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த செய்தியை உடனே போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு அதன் பிராந்திய இயக்குனர் சமீரும் மறுத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X