2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வழிகிறது வைகை அணை!

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 10 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேனி:

தொடர்ந்து பெய்துவரும் கனமழையினாலும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாகவும் தேனி மாவட்டத்திலுள்ள  வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது.

தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையால் வைகை அணைக்கு பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, தேனி முல்லை ஆறு, வருஷநாடு வைகை ஆறு மூலம் நீர் வரத்து கிடைக்கும். சில நாட்களாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் அணைக்கான நீர் வரத்து கணிசமாக உள்ளது. இம்மாத துவக்கத்தில் 62 அடியாக இருந்த நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று 10 ஆம் திகதி  முழு கொள்ளவை எட்டியது.

அணைக்கு 3,569 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. பாசன கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதனையடுத்து மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .