2025 மே 10, சனிக்கிழமை

வானில் பறந்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Mayu   / 2023 டிசெம்பர் 16 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை எழில் கொஞ்சும் இமாச்சல் பிரதேசத்தின் மிதவை குடையில்  (PARACHUTE) பறந்து  தரிசிப்பதற்காக அங்கு பல  வசதிகள் புழக்கத்தில் உள்ளன. அரசின் அனுமதியோடு அவற்றில் பறந்து இயற்கை அழகை அள்ளிப் பருகலாம். ஆனால் பஞ்சாப்பை சேர்ந்த ஒருவர் ஸ்கூட்டருடன் மிதவை குடையில் (parachute) பறந்தது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த ஹர்ஷ் என்பவர்  வழக்கமான மிதவை குடை (PARACHUTE)  சாகசங்களுக்கு அப்பால் புதிதாக முயற்சிக்க விரும்பினார். அதன்படி தனது இ-ஸ்கூட்டரில் அமர்ந்தபடி மிதவை குடையில் (PARACHUTE)  சாகசத்தை முயன்றார்.

குறிப்பாக தர்மசாலா மற்றும் பிர் பில்லிங்கின் பிற மிதவை குடை (PARACHUTE)  தளங்களில், முன்னதாக நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை முன்னுதாரணமாக்கி, தற்போதைய இந்த செயலுக்கு  எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

ஏரோ கிளப் ஆஃப் இந்தியாவின் விதிமுறைப்படி நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தளத்திலும் மிதவை குடை (PARACHUTE)  செய்வதற்கு உள்ளூர் நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

இதன்படி அனுமதி பெறாது ஸ்கூட்டரில் மிதவை குடை மூலம்(PARACHUTE)  வானில் பறந்த ஹர்ஷ் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X